மன்றப் பேச்சாளர்கள்

ரேவதி

நாம் திருமதி ரேவதியை நம் அன்புக்குரிய கலைஞராக அறிவோம். ஒரு தாயாக, பொறுப்பு மிக்க தலைவியாக, சமூகத்தில் ஈடுபாடுள்ள குடிமகளாக, நம் அடுத்த தலைமுறைக்கு எத்தகைய உலகத்தை விட்டுச் செல்கிறோம் என்கிற கருத்துமிக்க சிந்தனைவாதியாகத் தான் கடந்த சில
வருடங்களில் நடந்து வந்த பயணத்தை, தன் மறுபக்கத்தை நம்முடன் பகிர முதல் பேச்சாளராக மன்றத்தில் பகிர்ந்தார் ரேவதி. அவருடைய பேச்சு இங்கே

ஞானி சங்கரன்

ஞானி சங்கரன் சிறந்த பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, மற்றும் அரசியல் விமர்சகராக திகழ்ந்தவர். விகடன் பத்திரிக்கைகள், தீம் தரிகிட, விண் நாயகன் எனப் பல பத்திரிக்கைக ளிலும், திரையுலகிலும் பெயர் பதித்தவர்.மன்றம் பற்றித் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மறுகணம் பேசுகிறேன் என ஒப்புக்கொண்டவர்.
நீண்ட நாள் உடல் நலக் குறைவின் காரணமாக, மன்ற நிகழ்வு காலை மறை ந்தார். அவர் பேச்சைப் பதிவு செய்ய இயலாது போனாலும் அவர் அன்பையு ம் ஆசிகளையும் பதிவு செய்து தொடங்கியது முதல் மன்றம்.

சுந்தர் கணேசன்

sundar-ganesan-mandram

வரலாறு எழுதப்படுவது எப்படி?
ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்படுகின்ற ஆவணங்கள், நூல்களினின்றும் திரட்டப்படுகின்ற அறிவே வரலாறு. தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி உலகளாவிய தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்ற ரோஜா சர் முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 1994இலிருந்து ஆவணப் பாதுகாப்பில் ஈடுபட்டுப் ப்ணியாற்றி வருபவர்
சுந்தர் கணேசன். இந்தப் பணியால் வரலாறு எப்படி
செதுக்கப்படுகிறது? அறிய இங்கே அழுத்தவும்.

பாலாஜி சம்பத்

அறிவியல் நம்மைச் சுற்றிலும் இருக்கிற உலகத்தை விளக்குகிற கருத்துக்களே தவிர கடினமான ஒன்றுமில்லை.
எப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அறிவியலை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும்; உள்ளுக்குள்ளே இயற்கையாய் இருக்கிற ஆர்வத்தை எவ்விதம் தூண்டிவிடுவது எனத் தன் சமூகப்பணி வாயிலாகவும், “ஆஹா குரு”
பள்ளியின் மூலமும் தெரிந்து கொண்ட நெளிவு சுளிவுகளை நம்முடன் பகிர்ந்தார் கல்வியாளர் பாலாஜி சம்பத்.

சௌம்யா ஸனக் குமார் ஆத்ரேயா

இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் ரசித்திருப்பீர்கள்.
இசையின் ஸ்வரங்களால் இதயங்களை மீட்ட மட்டுமில்லை, உடலிலும் மனதிலும் இருக்கக்கூடிய இடர்களையும் குணப்படுத்திட முடியும் எனத் தேர்ந்தவர் சௌம்யா.
டாக்ட்ர். சௌம்யா ஸனக் கர்நாடக இசையின் மூலம் உடல் மற்றும் மனது சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கான தீர்வுகள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த விஷயத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்த பயன்களை எல்லொருக்கும் உதவும்படி செய்ய தன் கணவர் திரு.
ஸனக் குமார் ஆத்ரேயாவுடன் ஸ்வரக்ஷேமா எனும் அறக்கட்டளையை நிருவகித்து வருகிறார். டாக்ட்ர். சௌம்யா இசையே குணமாய் என்ற தலைப்பில் பேசினார்.

காயத்ரி சந்திரசேகர்

gayathr-chandrasekhar

பாதைகள் எப்போதும் நேர்கோடில் அமைந்துவிடுவதில்லை.
வளைந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் போகிற நம் வாழ்க்கைப் பாதைகளுக்குக்
கனவுகளே வழிகாட்டி என நெஞ்சத்தின் ஆழத்தில் கனன்று கொண்டிருந்த
கனவின் வழி நடந்த பாடத்தைப் பகிர்ந்து கொள்கிறார் காயத்ரி.

இவர் உலகமெங்கும் நடனமாடி வருகிற பெயர் பெற்ற பரதனாட்டியக் கலை வல்லுனர். “நிருத்ய கலை” நாட்டியப்பள்ளி வழி பலருக்கும் பரதம் கற்பிப்பவர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அல்சூர் சிவன் கோவிலில் இவர்
நடனமின்றி உற்சவம் நிறைவு பெறாது. காயத்ரியின் சுவாரசியமான பேச்சு இங்கே .

காமாட்சிப் பாட்டி, Dr.பாபு

kamakshi-patti-dr-babu

காமாட்சிப் பாட்டி – பெயரில்தான் பாட்டியே தவிர உள்ளத்திலும் செயலிலும் மத்தாப்பு. இளைய தலைமுறைக்கு சக்தியூட்டுகிற விசை. Dr.பாபு – கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் நிலம் வாழ் மனிதர்களைப் பற்றிய கரிசனமும் கலந்தவர். இருவரும் கலந்து பேசிய ஆக்கபூர்வமான் உரையாடல் இங்கே .

Dr. வத்சலா

வத்சலா அவர்கள் சென்னையில் உயிரியல் தொழில்நுட்பம் பயின்றவர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் ப்ராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி வந்து பெங்களூரில் தேசிய உயிரியல் ஆய்வு மையத்தில் நரம்பியல் ஆராய்ச்சி மையம் அமைத்திருக்கிறார்.
இத்தனைக்கும் நடுவில் தாய்மொழி ஆர்வத்தை விட்டுவிடாமல், மன்றம் பற்றிச் சொன்னவுடன், தமிழில் பேசுகிறேன் என முன்வந்தார். தொட்டால் பாயுது மின்சாரம் – காதலில் மட்டும் தானா? நமக்குள் மின்சாரம் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கிறது, தெரியுமா? அந்த ரகசியத்தை, அதன் செயல்பாடை நம்முடன் மன்றத்தில் பகிர்ந்தவர் .
பகிர்வு இங்கே.

மன்றத்தில் பேச வேண்டுமா?

சிந்தனையாளர்கள். சாதனையாளர்கள். ஆக்கவாதிகள். நீங்கள் நடந்து வந்த பாதையையும் உணர்ந்தறிந்த உண்மைகளையும் பகிர, பரிமாற அழைக்கிறோம். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இங்கே பதியுங்கள்.

Register as a speaker

* indicates required